search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் வீடு"

    பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகரை சேர்ந்தவர் கங்கா என்கிற சுரேஷ்.

    இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மணல் வியாபாரமும் செய்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் சுரேஷ் வீடு திரும்பினார்.

    இரவு 10 மணி வரை குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார்.

    10.30 மணியளவில் டமார் என்ற சத்தம் கேட்டது. சுரேஷ் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மீது யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

    வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. உடனே ‘அய்யோ தீ’ என்று அலறினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானகாட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்து கட்டிக் கொண்டு வந்த, 3 பேர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசியது தெரிய வந்தது. அவர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக இது நடந்ததா? அல்லது முன் விரோதமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    கடந்த தீபாவளி அன்று சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.
    கேரள மாநிலம் மலப்புரம் அருகே மூலிகை மயக்க மருந்து கொடுத்து தொழில் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூரை சேர்ந்தவர் ஹயாத் அலி. தொழில் அதிபர். இவரது மனைவி சைனபா. இவர்களுக்கு பிதா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 47) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ஹயாத் அலியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஹயாத்அலி, சைனபா, பிதா ஆகியோர் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    உடனடியாக 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது 3 பேருக்கும் மயக்க மூலிகை மருந்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறவினர்கள் ஹயாத் அலியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாள் மாயமாகி இருந்தார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தற்போது ஹயாத்அலி உள்பட 3 பேரும் மயக்க நிலையில் இருப்பதால் எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளை போனது என்பது தெரியவில்லை.

    இது குறித்து அவரது உறவினர்கள் திரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரியம்மாளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    சென்னை வேளச்சேரியில் கட்டுமான தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை வேளச்சேரி சீத்தாபதி நகர் ஜெயந்தி தெருவைச் சேர்ந்தவர் இளங்கேஸ்வரன்(வயது 47). இவருடைய தம்பி மகேஸ்வரன். தொழில் அதிபர்களான இவர்கள் இருவரும் கட்டுமான தொழில், தண்ணீர் வினியோகம் மற்றும் பல்பொருள் விற்பனையகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அண்ணன்-தம்பி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரான சிவகங்கையில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்துகொள்ள சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை இளங்கேஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர், இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இளங்கேஸ்வரன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுபற்றி சிவகங்கை சென்று உள்ள இளங்கேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னை திரும்பி வந்து கொண்டு இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகுதான் உண்மையில் அவரது வீட்டில் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற முழுவிவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். 
    ×